Wednesday, December 10, 2008

திருவள்ளுவருக்கு பெங்களூரில் சிலை

தமிழரான திருவள்ளுவருக்கு பெங்களூரில் சிலை வைக்க விடமாட்டார்களாம். இத்துனைக்கலம் சென்று, சிலைவடிவில் இருக்கும் ஒரு தமிழர் என்ன செய்துவிடப்போகிறார் கன்னடர்களை? ஏன் இப்படி தமிழ், தமிழர் களைகன்டு இப்படி பயந்து அலறி ஒடுகிறார்கள் அனைவரும்?

சலுவாலிய இயக்கத்தின் தலைவர் வாட்டாள் நாகராஜின் பேச்சைப்பருங்கள்

''திருவள்ளுவர் தமிழ்நாட்டுக்காரர்தானே..! அவருக்குத் தமிழ்நாடு முழுக்க சிலை வச்சுக்க வேண்டியதுதானே. எங்க மாநிலத்துல ஏன் வைக்கணும்? அந்தச் சிலையை திறக்கக் கூடாதுனு நாங்க ஆரம்பத்துலயே சொல்லிட்டோம். எத்தனை வருஷம் ஆனாலும், இதையேதான் சொல்லுவோம். கருணாநிதி சொன்னாலும் சரி, சிதம்பரம் சொன்னாலும் சரி... கொஞ்ச நாளா எந்தப் பிரச்னையும் வேண்டாம்னு அமைதியா இருக்கோம். கருணாநிதி சும்மா இருக்கமாட்டாரு போல இருக்கு..! எங்களுக்கு சென்னையில் சர்வக்ஞர் சிலையெல்லாம் வேண்டாம்!''

கன்னட ரட்சண வேதிக அமைப்பின் தலைவர் நாராயண கவுடா

''திருவள்ளுவர் சிலையைத் திறக்குறோம்னு யாராவது வந்தா ரெண்டு பக்கமும் உயிர்ச் சேதம் ஏற்படும், ஜாக்கிரதை! எந்தக் காரணத்தைக் கொண்டும் சிலையை திறக்க விடவே மாட்டோம். ஏற்கெனவே காவிரிப் பிரச்னையும் ஒகேனக்கல் பிரச்னையும் புகைஞ்சுகிட்டிருக்கு. இப்போ சிலைப் பிரச்னையைக் கருணாநிதி கிளப்பிவிடுறது யாருக்கும் நல்லதில்லை!''

No comments: