Tuesday, December 9, 2008

இறந்தபிறகும் சிம்மசொப்பனமாக இருக்கும் வி.பி.சிங்

வி.பி.சிங் சமூக சீரழிவை உன்டாக்கியவர் என்று எழுதியிருக்குகின்றது இந்தியா டுடே பத்திரிக்கை. நாங்கள் உயர்ந்த சாதிக்காரர்கள் என்று சொல்லிகொள்ளுபர்களின் ஊதுகுழலாக இருக்கும் இந்த பத்திரிக்கை இப்படித்தானே எழுதும். ஜாதியை முன்நிறுத்திய அரசியல் அன்றிலிருந்துதான் ஆரம்பித்தது என்று அழுது அலறி புலம்பியிருக்கு பாவம்.

அடக்குமுறைகளாலும், உரிமை மறுப்புகளாலும் அடங்கிக்கிடந்த மக்கள் இதன் மூலம்தான் தாங்களும் கல்வி, வாழ்க்கை மற்றும் சம மனித உரிமைகளை பெறத்தகுந்தவர்கள் என்று அறிந்தார்கள். அப்படி அவர்களை தன்முனைப்புபெறச்செய்து அவர்களின் வாழ்கைத்தரத்தினை உயர்த்துவதே இட ஒதுக்கீடுகளின் முக்கிய நோக்கமாகும் என்பதை மனிதத்தன்மை உள்ள அனைவரும் ஒப்புக்கொள்வர்.

எவன் எப்படி இருந்தால் என்ன, நான் மிக அறிவுள்ளவன், அறிவில்லாதவர்கள் நான் பெறும் இன்பங்களை பெறக்கூடாது. ஆளுமையில் குறைந்தவர்கள் கஞ்சிக்கு வழியற்றோராகத்தான் இருக்கனும். அவர்கள் மனித வாழ்க்கைக்கு லாயக்கு இல்லாதவர்கள். நம் நாட்டில் எல்லோருக்கும் கல்விகற்றுக்கொடுக்கும் வசதி இருந்தும், நிறைய கல்லூரிகளை திறக்கக்கூடாது. அப்படி திறந்தால் எல்லோரும் கல்விஅறிவை எளிதாக பெற்றுவிடுவர். வேலைவாய்ப்புகளையும் கல்வியையும் சலுகை முறையில் அவர்களுக்கு அளிக்கக்கூடாது. அப்படிச்செய்தால் எல்லோரும் சமமாகிவிடுவர் நாங்களெல்லாம் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளமுடியாதுன்னு சொல்லுபவர்கள் மனிதத்தன்மையே இல்லாதோர்ன்னு அனைவருமே ஒப்புக்கொள்வர்.

இப்படி மனிததன்மை அற்ற உயர்சாதிக்காரகள் ஊடகத்துறையை ஆக்கிரமித்துக்கொன்டு செய்யும் அட்டகாசம் இருக்கே அப்பப்பா தாங்க‌ முடியலை. தினமலர், தினமனி, இந்து மற்றும் இந்தியா டுடே இவைகள் எல்லாம் கூப்பாடு போட்டு ஒப்பாரிவைக்கின்றன.

ஒருவர் இறப்பின்போது அவரது நல்ல குனங்களைமட்டும் பேசுவதுதான் உலக வழக்கம். ஒன்றும் சொல்லாவிட்டலும் பரவாஇல்லை, தூற்றுபவர்களை என்னன்னு சொல்லுவது???????

இந்த இனைப்புகளைப்பாருங்கள்
http://dondu.blogspot.com/2008/12/blog-post_02.html

http://sundararajan123.blogspot.com/2008/12/blog-post.html

வெற்றிகரமாக வாழ்ந்துகாட்டுவதுதான் இவர்களின் முகத்தில் கரியைப்பூசும் வழி.


வி.பி.சிங் அவர்கள் சமூக சீரழிவை ஏற்ப்படுத்திவிட்டார் என்று அலறித்துடிக்கின்றதே, ஆமாம் உயர்ந்த வர்க்கத்தினர் என்று சொல்லிக்கொள்ளும் சமூகத்துக்கு சாவுமனியடித்து உயர்சாதியினரின் சமூகத்தின் அழிவை ஆரம்பித்துத்தான் வைத்திருக்கின்றார்.


வி.பி.சிங் மன்டல் கமிசனை அமலாக்க முயன்றதா , பள்ளிச் சிறுவர்களும் ஜாதி பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். என்று அலறுகிறார்கள். ஏனைய்யா இப்படி பயப்புடுறீங்க? ஜாதியை உன்டாக்கியதே நீங்கள்தானே? ஜாதியைக்காட்டி அடக்கி வைத்திருந்தது எலோரோலும் அறியப்பட்டதே என்ற ஆத்திரமா இல்லை இனிமேல் அடக்கிபிழைக்க முடியாதேங்குற பயமா?

No comments: